×

நம்பிக்கை மையத்தை மூட மாட்டோம் என அறிவிக்க தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம்

 

தஞ்சாவூர், பிப்.7: நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என அறிவிக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பி இயக்கத்தை எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கம் தஞ்சாவூரில் நடத்தியது.
தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி எச்.ஐ.வி தொற்றாளர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர்கள் நலச்சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் சாந்தி தலைமையில் மாபெரும் அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர், நிஷா, மாவட்ட செயலாளர் சசிகலா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று கடந்துள்ள நிலையில் இந்தியாவில் எச்.ஐ.வி தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளது. எனவே எச்.ஐ.வி பரிசோதனை முறைகளை வலுவாக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ள நிலையில் ஒன்றிய அரசு தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசின் நல்வாழ்வுத்துறையின், மருத்துவ சேவைகளை, நோக்கங்களை சிதைக்கிற ஒன்றிய அரசின் தவறான போக்குகளுக்கு தமிழக முதல்வர் இடமளிக்க கூடாது. எனவே ஏழை , எளிய மக்களின் நலன் கருதி நம்பிக்கை மையங்களை மூட மாட்டோம் என தமிழக அரசு கொள்கை ரீதியாக அறிவிக்க வேண்டும் என அஞ்சல் அட்டையில் குறிப்பிட்டுள்ளது.

The post நம்பிக்கை மையத்தை மூட மாட்டோம் என அறிவிக்க தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Thanjavur ,All AIDS Control Employees Welfare Association ,central government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு